சாலைகளை மற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் புதிய திட்டம்
பொதுமக்கள் சாலைகளை, மற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய திட்டத்துக்குப் பரிந்துரைகளை வழங்கும்படி நகரச் சீரமைப்பு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூர்: பொதுமக்கள் சாலைகளை, மற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் புதிய திட்டத்துக்குப் பரிந்துரைகளை வழங்கும்படி நகரச் சீரமைப்பு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இடம், நேரம், நடவடிக்கைகள் என்ற 3 அம்சங்களின் அடிப்படையில் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும்.
பரிந்துரைகளை முன்வைப்போர், பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் சேவை வழங்கவேண்டும் அல்லது வசிக்கவேண்டும். அத்துடன் அவர்களின் திட்டங்களை அங்குள்ளவர்கள் ஆதரிக்கவேண்டும். வெற்றிபெறும் பரிந்துரைகளைச் செயல்படுத்த, 5 ஆயிரம் வெள்ளி வரை நிதி ஆதரவு வழங்கப்படும்.