மரபுடைமைத் தலமாக சிங்கப்பூரின் பூமலை? இன்று முடிவுகள்
சிங்கப்பூரின் பூமலை ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தின் மரபுடைமைத் தலமாக வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்ற முடிவு இன்று பின்னேரத்தில் வெளிவரவுள்ளது.
கோப்புப் படம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பூமலை ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தின் மரபுடைமைத் தலமாக வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்ற முடிவு இன்று பின்னேரத்தில் வெளிவரவுள்ளது. உலக மரபுடைமை குழு அதனை அறிவிக்கும். அதற்கான சந்திப்பு ஜெர்மனியின் பான் (Bonn) நகரில் இடம்பெறுகிறது.
36 தளங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்கள் குறித்து சந்திப்பில் பரிசீலிக்கப்படும். நினைவுச் சின்னங்களுக்கும் தலங்களுக்குமான அனைத்துலக மன்றம், கடந்த மே மாதம் பூமலையை முன்மொழிந்திருந்தது.