Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாபா நிலநடுக்கத்தில் 8 பேர் பலி

மலேசியாவின் சாபா மாநிலத்தில் நிலநடுக்கத்தில் மாண்ட மேலும் 6 பேர், தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியின் 5 மாணவர்களும், ஓர் ஆசிரியரும் ஆவர் என்று கல்வி அமைச்சு உறுதிபடுத்தியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மலேசியாவின் சாபா மாநிலத்தில் நிலநடுக்கத்தில் மாண்ட மேலும் 6 பேர், தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியின் 5 மாணவர்களும், ஓர் ஆசிரியரும் ஆவர் என்று கல்வி அமைச்சு உறுதிபடுத்தியிருக்கிறது. அதோடு, மாணவர்களுடன் சென்ற  சாகச பயிற்றுவிப்பாளரான முகமது டானிஸ் பின் அம்ரானின்(Muhammad Daanish bin Amran) உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்கள்,

Ameer Ryyan bin Mohd Adeed Sanjay,

Emilie Govanna Ramu,

Matahom Karyl Mitzi Higuit,

Rachel Ho Yann Shiuan,

Sonia Jala

ஆசிரியர் Loo Jian Liang Terrence Sebastian என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவர், Navdeep Singh Jaryal Raj Kumar-ஐயும், ஆசிரியர் Mohammad Ghazi Bin Mohamed-ஐயும் இன்னுமும் காணவில்லை.

மாணவர்களுடன் சென்ற, தீரச் செயல் வழிகாட்டியான சிங்கப்பூரர் Muhammad Daanish bin Amran-ஐத் தேடும் நடவடிக்கையும் நடைபெற்றுவருகிறது. 

இன்னோரு பள்ளி மாணவி பியோனி வீயின்(Peony Wee) உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 8 சிங்கப்பூரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கோத்தா கினபாலுவில் இருக்கும் கல்வியைமைச்சு அதிகாரிகளும், மற்ற அரசாங்க அதிகாரிகளும், இந்த இக்கட்டான காலத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்கிவருகின்றனர். உறவினர்களையும், மாண்டவர்களையும், உடனடியாக சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்