Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"மாணவர்களை நினைவில்கொள்வோம்": அமைச்சர் ஹெங்

கல்வி அமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட், தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த  மாணவர்களும் ஆசிரியரும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் மாண்டது குறித்து தமது அமைச்சு ஆழ்ந்த வருத்தமடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: கல்வி அமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட், தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த  மாணவர்களும் ஆசிரியரும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் மாண்டது குறித்து தமது அமைச்சு ஆழ்ந்த வருத்தமடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

கோத்தா கினபாலு மலைப்பகுதியில் சென்ற வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவர்கள் மரணம் அடைந்தனர். துயரத்தில் வாடும் தொடக்கப்பள்ளியின் முதல்வர் Caroline Wu-வுக்கும் அவரது குழுவினருக்கும் தமது முழு ஆதரவைத் திரு. ஹெங் தெரிவித்தார். சமூகத்தின் துயரத்தை அவர்களால் நன்கு உணரமுடிவதாக அமைச்சர் சொன்னார். காரணம், மாண்ட மாணவர்களுடனும் ஆசிரியருடனும் நெருங்கிப் பழகியவர்கள் அவர்கள்.

கல்வியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திரு. ஹெங் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். மன உறுதியையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்திய மாணவர்களின் போராட்ட குணங்களை இந்தத் துயரமான தருணத்தில் நினைத்துப்பார்க்கவேண்டும். அதுவே சிங்கப்பூர் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

சிறந்து விளங்கவேண்டும் என்ற பிள்ளைகளின் துணிவிலிருந்து  நம்பிக்கை பெறவேண்டும். அதன்வழி, நம் மாணவர்களுக்கும் சமூகத்தினருக்கும் ஆதரவளிக்கவும் பரிவுகாட்டவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஹெங் கேட்டுக்கொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்