Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காயமடைந்த மாணவர்களைச் சந்தித்த அமைச்சர் ஹெங்

கல்வி அமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட் நிலநடுக்கத்தில் காயமடைந்து KK மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 2 மாணவர்களைச் சந்தித்துள்ளார். அவருடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஹவாஸி டைபியும் (Hawazi Daipi) சென்றிருந்தார். 

வாசிப்புநேரம் -
காயமடைந்த மாணவர்களைச் சந்தித்த அமைச்சர் ஹெங்

கல்வி அமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட் (படம்: Goh Chiew Tong)

சிங்கப்பூர்: கல்வி அமைச்சர் திரு ஹெங் சுவீ கியெட் நிலநடுக்கத்தில் காயமடைந்து KK மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 2 மாணவர்களைச் சந்தித்துள்ளார். அவருடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஹவாஸி டைபியும் (Hawazi Daipi) சென்றிருந்தார். 2  மாணவர்களும் நன்கு தேறிவருவதாகத் திரு. ஹெங் கூறினார். அவர்களுக்கு மருத்துவ, மனநோய்  நிபுணர்க் குழுவினர் ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளை நன்கு கவனித்துக்கொண்ட அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டதாகவும் திரு. ஹெங் கூறினார். காயமடைந்து, கோத்தா கினாபாலு மருத்துவமனையில் சிசிக்கைப் பெற்று வரும், மற்றோரு மாணவரைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வர, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  காணாமற்போன ஆசிரியரையும், மாணவரையும் தேடுவதில் மலேசிய அதிகாரிகளுடன் சிங்கப்பூர் தொடர்ந்து பணியாற்றும் என்றும் கல்வி அமைச்சர் ஹெங் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்