Skip to main content
காரில் 10 கிலோ போதைப்பொருள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காரில் 10 கிலோ போதைப்பொருள் - 22 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
காரில் 10 கிலோ போதைப்பொருள் - 22 வயது ஆடவர் கைது

(படம்: Central Narcotics Bureau)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் காரில் சுமார் 10 கிலோகிராம் போதைப்பொருளுடன் 22 வயது ஆடவர் பிடிபட்டுள்ளார்.

- 8.6 கிலோகிராம் கஞ்சா
- 1.5 கிலோகிராம் "ஐஸ்" (Ice)

ஆகியவை அவரது காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

மலேசியாவைச் சேர்ந்த அவர் சென்ற சனிக்கிழமை (1 ஆகஸ்ட்) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றார்.

அவரது கார் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

காரின் பின்புறத்தில் போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றின் மதிப்பு சுமார் 361,000 வெள்ளி.

விசாரணை நடைபெறுகிறது.

சிங்கப்பூருக்குள் 500 கிராமுக்கு அதிகமான கஞ்சா அல்லது 250 கிராமுக்கு அதிகமான methamphetamine கடத்த முயல்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்