100க்கும் அதிகமான குதிரைகளுக்குப் புதிய வீடு..செம்பவாங்கில்

TODAY
செம்பவாங் வட்டாரத்தில் 100க்கும் அதிகமான குதிரைகளுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
புக்கிட் தீமாவில் இருந்த முந்தைய Turf City வட்டாரத்திலிருந்து குதிரைகள் மாற்றப்படுகின்றன.
குதிரைகள் இவ்வாண்டு நடுப்பகுதியில் செம்பவாங்கில் வாழத் தொடங்கிவிடும்.
வட்டாரத்தைப் புதுப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகச் செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான திரு ஓங் யீ காங் (Ong Ye Kung) சொன்னார்.
புதிய வளாகத்தில் மக்கள் குதிரைகளை ஓட்டமுடியும்..குதிரையைக்கொண்டு மனநலச் சிகிச்சையும் பெறலாம் என்று அவர் கூறினார்.
புக்கிட் தீமாவில் இருந்த Turf Cityஇல் 1999ஆம் வரை குதிரைப் பந்தயங்கள் நடத்தப்பட்டன.
பின்னர் சிங்கப்பூர் குதிரைப் பந்தயச் சங்கம் (Singapore Turf Club) கிராஞ்சிக்கு மாறியது.
அது கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து குதிரைப் பந்தயத்தை நிறுத்திக்கொண்டதால் குதிரைகள் புதிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.