Skip to main content
உடற்குறையுள்ள 100 மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உடற்குறையுள்ள 100 மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ள 100 மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உடற்குறையுள்ள சுமார் 100 மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தண்ணீர்ப் பாதுகாப்பு, நம்பிக்கை, அடிப்படை நீச்சல் திறன் உள்ளிட்டவற்றில் வகுப்புகள் கவனம் செலுத்தும்.

சிங்கப்பூரில் முதன்முறையாக உடற்குறையுள்ளோருக்கெனத் தண்ணீர் பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோரில் பாதிக்கும் குறைவானவர்களே உடற்பயிற்சி செய்வதாகச் சொல்கிறது 2023இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு.

அத்தகையோருக்கு நீச்சல் பயில்வது எப்போதுமே சவால்.

பயிற்சிக் கட்டணம் அதிகமாக இருக்கும், போதிய கருவிகள் இல்லாமல் இருக்கும்.

புதிய திட்டம் அந்தக் குறையைப் போக்கும் என்பது நம்பிக்கை.

திட்டத்துக்காக OCBC 70,000 வெள்ளி நிதியளிக்கிறது.

ஆண்டு முழுதும் சுமார் 100 மாணவர்களுக்கு 800 இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு மாணவருக்கும் மூன்று மாத காலம் 8 வகுப்புகள் நடத்தப்படும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்