Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு COVID-19 முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது'

வாசிப்புநேரம் -
'100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு COVID-19 முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது'

(படம்: Aaron Low/TODAY)

சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சு கூறியுள்ளது.

5இலிருந்து 11 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.

தொடக்கநிலை 1 முதல் 6 வரை படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் இருவர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சு சொன்னது.

உடன்பிறப்புகள் முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாட்டின்கீழ், கடந்த திங்கட்கிழமையிலிருந்து வியாழன்வரை 2,800க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.  

அதாவது, சராசரியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்த பிள்ளைகளில் 20 விழுக்காட்டினர் தங்கள் உடன்பிறப்புகளை அழைத்துச் சென்றதாக அமைச்சு குறிப்பிட்டது.

SPED எனும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான 12 பள்ளிகளில், தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் மூவரில் இருவர்  தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவுசெய்துள்ளனர். 

தகுதிபெற்ற பிள்ளைகளுக்கு இரண்டாம் தடுப்பூசி போடும் பணி நாளை மறுநாளிலிருந்து (17 ஜனவரி) தொடங்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa