Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

11 வயது மாணவன் மீது மோதிய வாகனம் - காவல்துறை விசாரணை

வாசிப்புநேரம் -
11 வயது மாணவன் மீது மோதிய வாகனம் - காவல்துறை விசாரணை

(படம்: Facebook/SG Road Vigilante)

சிங்கப்பூரின் டெக் வை வட்டாரத்தில் 11 வயதுச் சிறுவன் மீது கார் மோதிய சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

சம்பவம் டெக் வை கிரசெண்ட் (Teck Whye Crescent), டெக் வை அவென்யூ (Teck Whye Avenue) சந்திப்பில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. 

நேற்று முன் தினம் மாலை, விபத்து குறித்துத் தகவல் வந்ததாகவும், சிறுவன் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையில் 53 வயதுப் பெண்  உதவுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்தச் சிறுவன் தனது மாணவர் என்பதை டெக் வை தொடக்கப்பள்ளி (Teck Whye Primary School) உறுதி செய்துள்ளது.

பச்சை நிறச் சீருடையில் சாலையைக் கடக்கும் சிறுவனை வெள்ளைக் கார் மோதி அவன் கீழே விழுவதையும், காரை ஓட்டிய பெண் வாகனத்தை நிறுத்திவிட்டு, கதவைத் திறந்து சிறுவனின் நிலையைப் பார்ப்பதையும் காணொளியில் பார்க்க முடிகிறது. 

பாதசாரிகள் சாலையைக் கடக்காத போது வாகனமோட்டிகள் வலது புறம் திரும்பக்கூடிய சாலையில் விபத்து நேர்ந்தது. 

மாணவர் வருவதைப் பார்க்காமல் அந்தப் பெண் வாகனத்தை வலதுபுறம் செலுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்