Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 111 பெண்களும் ஓர் ஆடவரும் கைது

வாசிப்புநேரம் -
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 111 பெண்களும் ஓர் ஆடவரும் கைது

(படம்: Jeremy Long)

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 111 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

58 வயது ஆடவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறினர்.

மார்ச் 8-ஆம் தேதிக்கும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தீவின் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

அவற்றுள் கூட்டுரிமை வீடுகள், உடல்பிடிப்பு  நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புகள் ஆகியவை அடங்கும்.

பேலஸ்டியர் ரோடு (Balestier Road), பிடோக் (Bedok), புக்கிட் பாத்தோக் (Bukit Batok), கேலாங் (Geylang), ஜாலான் புசார் (Jalan Besar), யீஷூன் (Yishun) உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைதான பெண்களில் சிலர் இணையம்வழி பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மாதர் சாசனப்படி சிங்கப்பூருடன் தொடர்பிலான இணையத் தளங்கள்மூலம் வர்த்தகரீதியான பாலியல் சேவைகளை வழங்கும் நபர்களுக்கு 100,000 வெள்ளிவரை அபராதமோ 5 ஆண்டுவரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa