2000க்கும் அதிகமானோர் BTO வீடுகளை வாங்கினர்
தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளை, 2012-ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 2000க்கும் அதிகமான சிங்கப்பூரர்க் குடும்பங்கள் சலுகைகளுடன் வாங்கியிருந்தன. தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு காவ் பூன் வான் (Khaw Boon Wan) அதனைத் தெரிவித்தார்.

கோப்புப் படம் (படம்: Hester Tan)
சிங்கப்பூர்: தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளை, 2012-ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 2000க்கும் அதிகமான சிங்கப்பூரர்க் குடும்பங்கள் சலுகைகளுடன் வாங்கியிருந்தன. தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு காவ் பூன் வான் (Khaw Boon Wan) அதனைத் தெரிவித்தார். அதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.
47 குடும்பங்கள், ஈரறை வீடுகளுக்கு, 40 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான தொகைக்கு, முன்பதிவு செய்தன.சுமார் 280 குடும்பங்கள், மூவறை வீட்டை, 120 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான தொகைக்கு முன்பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.கிட்டத்தட்ட 1700 குடும்பங்கள், நான்கறை வீட்டை, 250 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவான தொகைக்கு, முன்பதிவு செய்தன. தகுதிபெற்ற குடும்பங்களுக்குச், சலுகைகளுக்குப் பிறகு, வீடுகளுக்கு அந்த விலைகள் குறிக்கப்பட்டதாக அமைச்சர் காவ் சொன்னார்.