Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிங்கப்பூரர்கள் யாருக்கும் காயமில்லை "

சீனாவின் தியான்ஜின் நகரில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களில், சிங்கப்பூரர்கள் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 17 பேர் மாண்டனர். 400க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூரர்கள் யாருக்கும் காயமில்லை "

தியான்ஜின், சீனா

சிங்கப்பூர்: சீனாவின் தியான்ஜின் நகரில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களில், சிங்கப்பூரர்கள் யாரும் காயமடைந்ததாக தகவல்கள் இல்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 17 பேர் மாண்டனர். 400க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சு பதிலளித்தது. சம்பவ இடத்திற்கு அருகே 79 சிங்கப்பூரர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுள் சிலர், 16 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் Sino-Singapore Tianjin Eco-Cityல் வேலை செய்கின்றனர். பதிவுசெய்யப்பட்ட சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோரைத் பெய்ச்சிங்கிலுள்ள சிங்கப்பூர் தூதரகம் தொடர்புக்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

பதிவுசெய்யப்பட்ட அனைத்து சிங்கப்பூரர்களை தொடர்புக்கொள்ளும் வரையில் அமைச்சு தியான்ஜின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும். பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு தூதரக உதவி வழங்கப்படும் என்றும் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

தியான்ஜினிலுள்ள சிங்கப்பூரர்கள், பெய்ச்சிங்கிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தை +86-1391 0755 251 அல்லது singemb_bej [at] mfa.sg என்ற இணையப்பக்கம் மூலம் தொடர்புக்கொள்ளலாம். அவர்களது இருக்கும் இடத்தைக் தெரிவிக்கலாம் அல்லது தூதரக உதவியை நாடலாம். மாறாக, 24 மணி நேர MFA Duty அலுவலகத்தை +65 6379 8800 / 8855 அல்லது mfa_duty_officer [at] mfa.gov.sg ஆகியவற்றைத் தொடர்புக்கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்