Skip to main content
குடிநுழைவு விதிமீறல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குடிநுழைவு விதிமீறல் - 13 பேர், அடைக்கலம் தந்தவர் கைது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹவ்காங் (Hougang) வட்டாரத்தில் குடிநுழைவு விதிமுறையை மீறிய 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைதானார்.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

கைதானவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் 11 பேர் ஆண்கள்; இருவர் பெண்கள். அவர்கள் 19 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்கள் வருகை அனுமதி அட்டை காலாவதியான பின்னரும் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர்.

அவர்களுக்குத் தங்குமிடம் வழங்கிய சந்தேகத்தில் கைதானவருக்கு வயது 26.

விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்துக்கும் மேல் தங்குவது கடும் குற்றம்; கடும் தண்டனை விதிக்கப்படும் என்று ஆணையம் எச்சரித்தது.

குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் 3 பிரம்படிகள், 6,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குற்றவாளிகள் நாடு கடத்தப்படுவர்.

மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்படும்.

அடைக்கலம் கொடுத்த குற்றவாளிக்குக் கூடியபட்சம் ஈராண்டுகள் சிறையும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

 

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்