Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலையிடப் பாகுபாடு - கடந்த 5 ஆண்டுகளில் 131 சம்பவங்களில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது

வாசிப்புநேரம் -
உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவுகளும் உள்துறை அமைச்சும் கடந்த 5 ஆண்டுகளில் வேலையிடப் பாகுபாடு தொடர்பிலான 310 சம்பவங்களை விசாரித்திருப்பதாகச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 131 சம்பவங்களில் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

வேலையிடத்தில் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றி அதிகாரிகள் எப்படிப் புகார் அளிக்கலாம் என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

வேலையிடப் பாகுபாடு குறித்த அனைத்துப் புகார்களும் கடுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்படும் என்று திரு. சண்முகம் கூறினார்.

அதிகாரிகள் ரகசியமாகப் புகார் அளிப்பதற்காக நடப்பில் இருக்கும் நடைமுறைகளை அவர் சுட்டினார்.

Channel for Formal Grievance Handling, Channel for Confidential Ethical Disclosure ஆகியவை அதில் அடங்கும்.

அவர்கள் எழுத்து வடிவிலோ நேரில் சென்றோ தங்கள் அக்கறைகளைத் தெரிவிக்கலாம் என்றார் அமைச்சர் சண்முகம்.

விசாரணை முடிவில் திருப்தி இல்லை என்றால் அமைச்சில் உயர்பதவியில் இருப்பவரிடம் அல்லது அரசாங்க சேவையின் தலைவரிடம் விவகாரத்தை எடுத்துச் செல்லலாம் என்று அவர் கூறினார்.

வேலையில் சேரும்போதே அந்த நடைமுறைகள் பற்றி அதிகாரிகளுக்கு விவரிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் காவல்துறை அதிகாரி யீஷூன் புளோக்கின் கீழ்த்தளத்தில் மாண்டுகிடந்தார்.

தாம் வேலையிடப் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டதாக அவர் தமது Facebook பக்கத்தில் கூறியிருந்தார்.

அதிகாரிகள் வேலையிடச் சிரமங்களைப் புகார்செய்வது குறித்துச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்