Skip to main content
எதிர்காலத்தை உறுதி செய்வது ஆயுதப்படை: அதிபர் தர்மன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

எதிர்காலத்தை உறுதி செய்வது ஆயுதப்படை: அதிபர் தர்மன்

வாசிப்புநேரம் -
எதிர்காலத்தை உறுதி செய்வது ஆயுதப்படை: அதிபர் தர்மன்

(படம்: Facebook/ Ministry of Defence, Singapore, MINDEF)

உலக நாடுகளில் தொடரும் பூசலுக்கு இடையே சிங்கப்பூர் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது உறுதியான ஆயுதப் படையைச் சார்ந்திருக்கிறது என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

உலக நாடுகளுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் அதேவேளை நமது பண்புகளையும் கட்டிகாப்பது அவசியம் என்றார் அவர்.

சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகளுக்கான பதவியேற்பு விழாவில் அதிபர் தர்மன் உரையாற்றினார்.

ஆயுதப் படை, கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 400க்கும் அதிகமானோர் அதிகாரிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

அதிநவீன தொழில்நுட்பங்களும் பயிற்சிகளும் மட்டும் வெற்றியைத் தீர்மானித்துவிட முடியாது.

வீரர்கள் தங்களுக்குள் வைத்திருக்கும் உயரிய பண்புகள் மிகவும் முக்கியம் என்று திரு தர்மன் வலியுறுத்தினார்.

பல வீரர்களுக்கு இன்றைய பதவியேற்பு விழா புதுத்தெம்பளித்தது.

அவர்களில் ஒருவர் இரண்டாம் லெப்டினன்ட் ரிக்கேஷ் ரவி சந்திரன்.

பதவியேற்புக் குறித்து அவர் "செய்தி"யிடம் பகிர்ந்துகொண்டார்.

"பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என் நண்பர்களும் என் குடும்பத்தினரும் எனக்கு உற்சாகமளித்தனர். சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடல்சார் வர்த்தகம் பயின்றபோது கடற்படையில் சேர ஆசை வந்தது. அதையடுத்து நான் கடற்படையில் சேர்ந்தேன். நிறையக் கடினமான பயிற்சிகள் இருந்தன. நான் ஒரு மாதத்துக்கு சுரபாயாவுக்கும் கோத்தா கினபாலுவுக்கும் கப்பலில் சென்றுவந்தேன்" என்றார்.

பதவியேற்ற வீரர்கள் அனைவரும் 38 வாரம் அதிகாரிகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டவர்கள்.

உண்மையான சூழல்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிகளை வீரர்கள் மேற்கொண்டனர்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்