Skip to main content
"HIV மீதுள்ள கண்ணோட்டம் மாற வேண்டும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"HIV மீதுள்ள கண்ணோட்டம் மாற வேண்டும்"

வாசிப்புநேரம் -
AIDS எனும் தடுப்புச் சக்தி இழப்பு நோயைக் கட்டுப்படுத்த சில புதிய வழிமுறைகள் ஆராயப்படுகின்றன.

இன்று சிங்கப்பூரில் நடைபெற்ற 14ஆவது மாநாட்டில் சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி (Janil Puthucheary) அது பற்றிப் பேசினார்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2023) கிட்டத்தட்ட 52 விழுக்காட்டினருக்கு HIV கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது நோய் முற்றிய பிறகே தெரியவந்தது.

சுயமாகப் பரிசோதனை செய்து நோய் இருப்பதைக் அறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.

சென்ற ஆண்டு (2023) 15 விழுக்காட்டினர் மட்டுமே சுயமாகப் பரிசோதனை செய்து HIV கிருமி இருப்பதை அறிந்தனர்.

இந்த நிலை மாற நோயின் மீதுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவது அவசியமென டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.

HIV கிருமியால் பாதிக்கப்பட்டிருப்போரில் கிட்டத்தட்ட 93 விழுக்காட்டினர் முறையான சிகிச்சையின் மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நோயைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உதவும் புதிய கருவி விரைவில் வருகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்