Skip to main content
உரிமமின்றி வாகனம் ஓட்டிய 15 பேர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உரிமமின்றி வாகனம் ஓட்டிய 15 பேர் கைது

வாசிப்புநேரம் -
உரிமமின்றி வாகனம் ஓட்டிய 15 பேர் கைது

கோப்புப் படம்: CNA/Marcus Mark Ramos

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் உரிமமின்றி வாகனம் ஓட்டிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 24 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

கடந்த வாரம் அட்மிரால்டி ரோடு வெஸ்ட்டில் சோதனை நடத்தப்பட்டது.

போக்குவரத்துக் காவல்துறை, தேசியச் சுற்றுப்புற அமைப்பு, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய அமைப்புகளின் அதிகாரிகள் இணைந்து சோதனையை நடத்தினர்.

சுமார் 280 மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர்.

அதிகச் சத்தம் எழுப்பும் வாகனம் தொடர்பில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு 20 எச்சரிக்கைக் குறிப்புகளை வழங்கியது.

நிலப் போக்குவரத்து ஆணையம் 16 விதிமீறல்களைக் கண்டறிந்தது.

அவற்றுள் சில...

🚫 முறையற்ற உரிமத் தகடுகளைப் பயன்படுத்தியது

🚫 காப்புறுதி இல்லாமல் மோட்டார்சைக்கிள் ஓட்டியது

🚫  காலாவதியான பிறகும் சாலை வரியைச் செலுத்தாதது

தகுந்த வாகன நுழைவு அனுமதி இன்றி சிங்கப்பூருக்குள் வந்தவரின் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து ஓட்டுநர்களும் இங்குள்ள சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்