சிங்கப்பூரில் உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டி - $16 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஆதரவு
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Singapore Aquatics)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் முதன்முறை நடைபெறவுள்ள உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டிகளுக்கு 16 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதி ஆதரவு கிடைத்துள்ளது.
ஜூலை மாதம் இடம்பெறவுள்ள போட்டிகளுக்காக நடத்தப்பட்ட முதல் சமூக சாலைக்காட்சியில் 8 புதிய நிறுவனப் பங்காளிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குவோரின் எண்ணிக்கை 13க்கு அதிகரித்துள்ளது.
ஒலிம்பிக் வெற்றியாளர் ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling), தேசிய நீச்சல் வீரரும் இசைக் கலைஞருமான பெஞ்சமின் கெங் (Benjamin Kheng) இருவருக்கும் இடையே நட்புமுறைப் போட்டி.
விரைவில் நடக்கவுள்ள உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டிக்கு சமூகத்தின் ஆதரவைத் திரட்ட இந்த முயற்சி.
வரும் மாதங்களில் தீவெங்கும் இருவழித் தொடர்புடைய சாலைக்காட்சிகள் நடத்தப்படும்.
உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டி குறித்து மக்கள் தெரிந்துகொள்ளலாம்.
உலகின் சிறந்த நீச்சல் வீரர்கள் போட்டியிடுவதைக் காணவிரும்புவோர் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
முதல்முறை இங்கு நடைபெறவிருக்கும் போட்டிகளில் தொண்டூழியர்களாகப் பணியாற்ற விரும்புவோர் அதற்காகப் பதிந்து கொள்ளலாம்.
ஜூலை 11அம் தேதி தொடங்கும் உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீடிக்கும்.
2500க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் 70க்கும் அதிகமான போட்டிகளில் களமிறங்குவர்.

ஆதாரம் : Others