மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்
வாசிப்புநேரம் -
மத்திய கிழக்கிலிருந்து மேலும் 167 சிங்கப்பூரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் அவர்கள் நேற்றிரவு சிங்கப்பூர் வந்தடைந்தனர்.
விமானத்தில் புருணை, இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா ஆகியவற்றின் குடிமக்களும் இருந்ததாய் அமைச்சு தெரிவித்தது.
அவர்களுக்காக நீண்டநாள் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
ஓமானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இரண்டாவது சிறப்பு விமானத்தை எதிர்பார்த்திருந்தோரின் முகங்களில் அளவில்லா மகிழ்ச்சி.
மீண்டும் அன்புக்குரியவர்களை அரவணைக்க முடிந்ததில் பெருமூச்சு விட்டனர்.
பயணிகள் சிலர் பாதுகாப்பாக நாடு திரும்பியதில் நிம்மதி என்றனர்.
துபாயிலிருந்து ஓமானுக்குச் செல்ல நினைத்ததைவிட அதிக நேரமானதாய்ச் சிலர் கூறினர்.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பயணம் சுமுகமாக அமைந்ததாய் சிலர் தெரிவித்தனர்.
பஹ்ரேன், கத்தார், குவைத், ஜோர்தான் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூரர்கள் மீண்டும் சிங்கப்பூர் திரும்புவதற்குத் திட்டமிடப்படுகிறது.
நிலைமையைப் பொறுத்து வரும் வியாழக்கிழமைக்குள் (12 பிப்ரவரி) மூன்றாவது சிறப்பு விமானம் ரியாத் அல்லது ஜித்தாவிலிருந்து கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.