விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 17 பேர் கைது
படம்: Singapore Police Force
This audio is generated by an AI tool.
விபசாரத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 16 பேர் பெண்கள், ஒருவர் ஆடவர்.
அவர்கள் 21 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மெக்பர்சன் ரோடு (MacPherson Road), கிங் ஜார்ஜஸ் அவென்யூ (King George's Avenue), சிம்ஸ் அவென்யூ (Sims Avenue) பகுதிகளில் காவல்துறை திடீர்ச் சோதனை மேற்கொண்டது.
செப்டம்பர் 3,4 ஆகிய இரண்டு நாள்கள் நடந்த சோதனையில் 2,000 வெள்ளி ரொக்கம், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
41 வயது ஆடவர் விபசாரத்தில் ஈட்டிய பணத்தைச் சேகரித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
விபசாரம் மூலம் பிறர் சம்பாதிக்கும் பணத்தைச்
சார்ந்திருப்பது நிரூபணமானால் அதிகபட்சம் 100,000 வெள்ளி அபராதம், 5 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.