Skip to main content
பொங்கோல் பாலர் பள்ளியில் 18 பேருக்கு வயிற்றுக்கோளாறு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொங்கோல் பாலர் பள்ளியில் 18 பேருக்கு வயிற்றுக்கோளாறு

வாசிப்புநேரம் -
 பொங்கோல் பாலர் பள்ளியில் 18 பேருக்கு வயிற்றுக்கோளாறு

கோப்புப் படம்: Mulberry Learning @ Punggol

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பொங்கோலில் (Punggol) உள்ள Mulberry Learning பாலர் பள்ளியில் ஏற்பட்ட வயிற்றுக் கோளாற்றுச் சம்பவங்களை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (29 ஆகஸ்ட்) வரை 17 பிள்ளைகளும் ஓர் ஊழியரும் பாதிக்கப்பட்டதாகக் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு, தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியன தெரிவித்தன.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் இருவரில் ஒருவர் சிகிச்சை முடிந்து திரும்பினார்.

407 நார்த்ஷோர் டிரைவில் (Northshore Drive) உள்ள பள்ளியில், மாணவர்கள், ஊழியர்களின் நலனை உறுதிப்படுத்த நிலைமை கண்காணிக்கப்படுவதாக ECDA எனும் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு சொன்னது.

நோய்த்தொற்று தடுப்பு, கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றும்படி பள்ளிக்கு நினைவூட்டப்பட்டிருப்பதாக அது தெரிவித்தது.

சென்ற புதன்கிழமை (27 ஆகஸ்ட்) மவுண்ட்பேட்டன் (Mountbatten) புளோக் 92இல் (Block 92) உள்ள PCF Sparkletots பாலர் பள்ளியில் வயிற்றுக் கோளாறு சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டன.

அதில் 24 மாணவர்களும் 2 ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்