கஞ்சா கலந்த மின்-சிகரெட் - 17 வயது இளையர் கைது
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Sandra Sanders)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கஞ்சா கலந்த மின்-சிகரெட் வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 17 வயது இளையர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மற்றுமோர் இளையருடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
நேற்று நீதிமன்றத்தில் அவர் மீது மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
சம்பவம் பிப்ரவரி 18ஆம் தேதி நடந்தது.
தோ பாயோ லோரோங் 4-இல் உள்ள புளோக் 94-இல் இருவரும் போதைப்பொருளோடு காணப்பட்டனர்.
அவர்களிடம் போதைப்பொருள் அடங்கிய 25 பொட்டலங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 85 போதை மாத்திரைகளும் அவர்களிடமிருந்தன.
குற்றஞ்சாட்டப்பட்ட இளையர் அன்று இரவு ஜூரோங் வெஸ்ட் 73-இல் உள்ள புளோக் 744 கஞ்சா கலந்த மின்-சிகரெட்டுடன் காணப்பட்டார்.
அவர் மீண்டும் இம்மாதம் 8ஆம் தேதி விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வருவார்.
அவருடன் கைதான மற்றுமோர் இளையர் அடுத்த மாதம் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : CNA