Skip to main content
1800களில் தோன்றிய சிங்கப்பூர் கோயில்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

1800களில் தோன்றிய சிங்கப்பூர் கோயில்கள்- தெரியுமா?

வாசிப்புநேரம் -
1800களில் தோன்றிய சிங்கப்பூர் கோயில்கள்- தெரியுமா?
(கோப்புப் படம்: Envato Elements)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

20 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் புதிய இந்து ஆலயம் கட்டப்படவிருக்கிறது.

அது ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயம் என்று அழைக்கப்படும்.

சிங்கப்பூரின் 25ஆவது இந்து ஆலயம் அது.

யீஷுனில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் அருகே அது அமையவிருக்கிறது.

1800களில் சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் எவை?

தகவல்கள் இதோ!

Related article image
ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்

1827 - ஸ்ரீ மாரியம்மன் கோயில்

🛕ஆகப் பழைமையான இந்துக் கோயில்
🛕 சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயில்
🛕 தீமிதித் திருவிழாவுக்குப் பெயர்பெற்ற கோயில்

Related article image
படம்: Google Street View / Srini vas

1830 - ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயம்

🛕 பெண் பக்தர் ஒருவர் அம்மனின் படத்தை அரச மரத்தின்கீழ் வைத்து வழிபட்டார்.
அப்படித்தான் ஆலயம் உருவானது.
🛕1935ஆம் ஆண்டில் திரு ரெங்கசாமி மூரியார் ஆலயத்தை அதிகாரபூர்வமாகத் தோற்றுவித்தார்.

Related article image
(படம்: Sri Veeramakaliamman Temple, Singapore/Facebook)

1850கள் - ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்

🛕 கோவிலின் வரலாறு 1850களிலிருந்து தொடங்குகிறது.
🛕 1855ஆம் ஆண்டில் கம்போங் கப்பூர் (Kampong Kapor) சுண்ணாம்புக் கம்பங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் சிறு வழிபாட்டுத் தலத்தை அமைத்தனர்.
🛕 அதனால் மக்கள் அதைச் சுண்ணாம்புக் கம்பம் கோவில் என்று அழைத்தனர்.
🛕 1881இல் முறையான கோவில் கட்டடமாக உருப்பெற்றது.

Related article image
படம்: Facebook/Aum Papanun

1850கள் - ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்

🛕 குளத்தின் அருகே விநாயகர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
🛕 செண்பக மரமொன்று குளத்துக்கு அருகே இருந்தது
🛕 அதனால் கோயிலுக்குச் செண்பக விநாயகர் எனப் பெயர் வந்தது.

Related article image
கோப்புப் படம்: நித்திஷ் செந்தூர்

1855 - ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்

🛕 3 நிலப் பகுதிகளைக்கொண்டு ஆலய வளாகம் நிறுவப்பட்டது.
🛕 1855-இல் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த நரசிங்கம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கோயில் கட்டப்பட்டது.
🛕 1894-இல் மூனா சிதம்பரம் தம்முடைய நிலத்தைக் கொடுத்தார்.
🛕 1912-இல் சுற்றியிருந்த நிலத்தை அப்போதிருந்த முகம்மதிய, இந்து அறக்கட்டளை வாரியம் (Mohammedan and Hindu Endowments Board) ஈஸ்ட் இந்தியா நிறுவனத்திடமிருந்து வாங்கியது.

Related article image

1868- ஸ்ரீ சிவன் கோயில்

🛕  1868ஆம் ஆண்டில் ஆர்ச்சர்ட் சாலை வழியே சிவன் கோயிலை அமைக்க சிங்கப்பூரின் காலனித்துவ அரசாங்கம் இடத்தை ஒதுக்கியது.
🛕 1983ஆம் ஆண்டு வரை கோயில் அங்கு இருந்தது.
🛕 டோபி காட் (Dhoby Ghaut) ரயில் நிலையத்தைக் கட்டுவதற்காகக் கோயில் இடம் மாற வேண்டியிருந்தது.
🛕 1993ஆம் ஆண்டில் கேலாங் ஈஸ்ட்டில் கோயில் புதிய தோற்றத்துடன் எழுப்பப்பட்டது. 

Related article image
படம்: roots.gov.sg

1859 - ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம்

🛕 நகரத்தார் சமூகத்தினர் ஆலயத்திற்கான நிலத்தை வாங்கினர்
🛕 அதற்கு முன் சிங்கப்பூரில் வாழ்ந்த நகரத்தார்கள் வேல் ஒன்றை அரச மரத்தின்கீழ் வைத்து வழிபட்டனர்.

Related article image
படம்: Facebook/Vairavimada Kaliamman Thondargal

1860s - ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்

🛕 தொடக்கத்தில் கிள்ளினி, ஆர்ச்சர்ட் சாலை சந்திப்பில் இருந்த இக்கோயில் ரயில் பாதை கட்டுமானப் பணிகளுக்காகப் பலமுறை தற்காலிகமாக மாற்றப்பட்டது.
🛕 1933-ல் சோமர்செட் சாலையில் முறையாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
🛕 சோமர்செட் சாலை நிலம் நகர்ப்புற மறுசீரமைப்புக்காகக் கையகப்படுத்தப்பட்டது.
🛕 1982-ல் தற்போது அமைந்துள்ள தோ பாயோ பகுதிக்கு மாற்றப்பட்டது.

Related article image
படம்: HEB website

1870 - ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்
 

🛕 வாட்டர்லூ ஸ்ட்ரீட்டில் (Waterloo Street) அமைந்துள்ளது.
🛕 அந்தப் பகுதியில் இந்திய சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரித்தபோது அந்தக் கோயில் எழுப்பப்பட்டது.

Related article image
படம்: Suresh Nadhiya/Google

1888 - ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் ஆலயம்

🛕 காலாங் ரோட்டில் அமைந்திருந்த எரிவாயு ஆலையினால் (Kallang Municipal Gas Works) அதை மக்கள் காலாங் கேஸ்வர்க்ஸ் சிவன் ஆலயம் என்று 19ஆம் நூற்றாண்டில் அழைத்தனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்