சிங்கப்பூர்: விளையாட்டுத் திடலில் இரு சிறுவர்களின் சடலங்கள்

படம்: Google Maps
கிரீன்ரிட்ஜ் கிரெசன்ட்டில் (Greenridge Crescent) உள்ள விளையாட்டுத் திடலில் 11 வயதுச் சிறுவர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (21 ஜனவரி) மாலை 6.25 மணியளவில் அந்தத் திடலிலிருந்து ஆடவர் ஒருவர் உதவி நாடி காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார்.
சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், அந்த ஆடவரின் இரு மகன்களும் அசைவற்றுக் கிடந்ததைக் கண்டனர்.
அவர்கள் மாண்டதை மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிசெய்தார்.
சிறுவர்களின் இயற்கைக்கு மாறான மரணம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.