Skip to main content
Nvidia நுண்சில்லு விவகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Nvidia நுண்சில்லு விவகாரம் - இருவர் மீது குற்றச்சாட்டுகள்

வாசிப்புநேரம் -

Nvidia நுண்சில்லு விவகாரத்தில் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஆரன் வூன் குவோ ஜியேவும் (Aaron Woon Guo Jie) ஏலன் வேய் ஸாவ்லுனும் (Alan Wei Zhaolun) Super Micro, Dell நிறுவனங்களிடம் வேண்டுமென்றே பொய் சொன்னதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

Nvidia நுண்சில்லுகள் நிர்ணயிக்கப்பட்ட தனிநபர்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கப்படமாட்டா என்று அவர்கள் பொய்த் தகவல் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஆடவர்களின் தடுப்புக்காவல் மேலும் 8 நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் நாள்களில் கூடுதல் ஆதாரம் கிடைக்கலாம் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.

வர்த்தக விவகாரப் பிரிவு, வங்கி அறிக்கைகளைச் சேகரிப்பதாகவும் சம்பந்தப்பட்ட தரப்புகளின் வாக்குமூலத்தைப் பெறுவதாகவும் அவர்கள் கூறினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் சீனாவுக்குச் சட்டவிரோதமாக Nvidia நுண்சில்லுகளை அனுப்ப உதவியதாகச் சந்தேகிக்கப்படும் 9 பேரில் அடங்குவர்.

அதிகாரிகள் கடந்த மாதம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்