காருக்குள் ஒளிந்துகொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேற முயன்ற மலேசியர்கள் கைது
வாசிப்புநேரம் -
படம்: ICA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்ற இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட காருக்குள் ஒளிந்திருந்த அவர்களை உட்லண்ட்ஸில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
30, 31 வயதிலான அவர்கள் இருவருக்கும் முறையான பயணப் பத்திரங்கள் இல்லை.
அவர்களும் அவர்களை ஏற்றிச் சென்ற கார் ஓட்டுநரும் மலேசியர்கள். மூவர் மீது கடந்த சனிக்கிழமை (5 ஜூலை) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறுவோருக்கு அதிகபட்சம் 2,000 வெள்ளி அபராதம், 6 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோதக் குடியேறிகளைச் சிங்கப்பூரிலிருந்து வெளியே கொண்டுசெல்லும் குற்றத்தைப் புரிவோருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறையும் குறைந்தபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படும்.
அத்தகைய குற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

ஆதாரம் : Others