யீஷூன் அணைக்கட்டில் ஆடவரின் சடலம்
வாசிப்புநேரம் -
படம்: Google Maps/ Ben Tan
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
யீஷூன் அணைக்கட்டில் (Yishun dam) ஓர் இறந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த 30 வயது ஆடவரின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
சம்பவம் நேற்று நடந்தது.
காலை சுமார் 7.25 மணிக்குச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் சொன்னது.
தற்காப்புப் படையினர் மீட்புக் கருவிகளைக் கொண்டு அந்த ஆடவரின் உடலைத் தண்ணீரிலிருந்து வெளியில் எடுத்தனர்.
ஆடவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் உறுதிப்படுத்தினார்.
மரணத்தில் சூது இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை 'செய்தி'யிடம் சொன்னது.
விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi