Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2 செயற்கைத் துணைக்கோளங்களை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
2 செயற்கைத் துணைக்கோளங்களை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது சிங்கப்பூர்

(படம்: Facebook/ISRO)

சிங்கப்பூரின் 2 செயற்கைத் துணைக்கோளங்கள் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டுள்ளன.

பேரிடர்கள், பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் ஆகியவற்றை அந்தத் துணைக்கோளங்கள் கண்காணிக்கும்.

சிங்கப்பூருக்காக, வணிக ரீதியாக பூமியைக் கண்காணிக்கும் துணைக்கோளங்களில் அவை இரண்டாவது.

ST Engineering நிறுவனத்தின் தயாரிப்பு, அந்தத் துணைக்கோளங்கள்.

Te-leos-2 என்னும் துணைக்கோளம் 750 கிலோகிராம் எடையுள்ளது. சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்ட அது, எந்தவொரு மோசமான வானிலையிலும் நாள் முழுவதும் அதிகத் தெளிவான படங்களை விண்வெளியிலிருந்து எடுத்து அனுப்பும்.

16 கிலோகிராம் எடையுள்ள Lume-lite-4 என்னும் சிறிய துணைக்கோளமும் விண்ணில் பாய்ச்சப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து அந்தச் செயற்கைத் துணைக்கோளங்கள் விண்ணில் ஏவப்பட்டன.

இதுவரை சிங்கப்பூர் இருபதுக்கும் மேற்பட்ட செயற்கைத் துணைக்கோளங்களை விண்ணில் பாய்ச்சியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்