Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உட்லண்ட்ஸில் கார் நிறுத்துமிட விபத்து... 2 வயதுச் சிறுமி மரணம்... ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
உட்லண்ட்ஸில் (Woodlands) கார் நிறுத்துமிடத்தில் நேர்ந்த சாலை விபத்தில் 2 வயதுச் சிறுமி மாண்டாள்.

விபத்து நேற்று (13 மார்ச்) புளோக் 326 உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 32இல் (Block 326 Woodlands Street 32) நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஒரு வேனும் 3 பாதசாரிகளும் சம்பந்தப்பட்ட அந்த விபத்துக் குறித்துப் பிற்பகல் 2.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக அது கூறியது.

விபத்தில் காயமடைந்த 4 வயதுச் சிறுவனும் 34 வயதுப் பெண்ணும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

33 வயது வேன் ஓட்டுநர், சிறுமியின் தந்தை என CNAக்குத் தெரியவந்துள்ளது. கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்துக் குறித்துத் தங்களுக்கும் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

விபத்துக்குப் பின்னர் சம்பவ இடத்தில் பதிவுசெய்யப்பட்ட காணொளி ஒன்று SG Road Vigilante Facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

வேன் மோதி விபத்து நேர்ந்தபோது சிறுமி தள்ளுவண்டியில் அமர்ந்திருந்ததாகக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்