Skip to main content
மது போதையில் வண்டியை ஓட்டியதாக 20 பேர் மீது குற்றச்சாட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மது போதையில் வண்டியை ஓட்டியதாக 20 பேர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மது போதையில் வண்டியை ஓட்டியதாக 20 பேர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அவர்கள் 21 இலிருந்து 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

அவர்களில் 7 பேர் கவனக்குறைவாக வண்டியை ஓட்டியதாகக் கூடுதலாகக் குற்றஞ்சாட்டப்படும்.

சிலர் கவனக்குறைவாக வாகனமோட்டி சாலையோரத் தடுப்புகளிலும் சமிக்ஞை விளக்கிலும் கார்களை இடித்தனர்.

வேறு சிலர் விரைவுச்சாலையில் வேக வரம்பை மீறினர்.

ஒருவர் சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். அவர் மதுபோதையில் இருந்ததால் தூங்கியதாகக் கூறப்பட்டது.

ஒருவர் மட்டும் இரண்டாவது முறையாக மதுபோதையில் காரை ஓட்டி பிடிபட்டார். 2010ஆம் ஆண்டில் அதே குற்றத்துக்காக அவருக்குக் கார் ஓட்ட ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது.

மதுபோதையில் வண்டியை ஓட்டினால் 2,000 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளிவரை அபராதம், ஓராண்டுவரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மறுபடியும் அந்தக் குற்றத்தைப் புரிந்தால் ஈராண்டுவரை சிறைத்தண்டனை கட்டாயம் விதிக்கப்படும். 5,000 வெள்ளியிலிருந்து 20,000 வெள்ளிவரை அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்