Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சமூகத்துக்கு உதவும் திட்டங்களை உருவாக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாய்ப்பு

வாசிப்புநேரம் -
சமூகத்துக்கு உதவும் திட்டங்களை உருவாக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாய்ப்பு

(படம்: Facebook/NTU, Singapore)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் பாடத்தின் ஒருபகுதியாகச் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை உருவாக்கவிருக்கின்றனர். 

புதிய திறன்-கல்விமான் விருதுபெற்ற 24 மாணவர்கள் அதில் பங்கெடுக்க வேண்டும். 

மொத்தம் 200 மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing)  தனிநபர்கள் தங்கள் சொந்த வெற்றிக்கு அப்பால் பார்ப்பது, வெற்றிக்குப் புதுவடிவம் தர உதவும் என்று சொன்னார். 

ஒவ்வொருவரும் தன்னுடைய வெற்றியை மட்டும் பார்த்தால் அதில் சுயநலம் கலந்துவிடும் என்று குறிப்பிட்ட அமைச்சர், சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கும்போது அரவணைக்கும் சமூகமாக மாறலாம் என்றார். 

மாணவர்கள் தனிப்பட்ட வகுப்புகள், பயிலரங்குகள், வழிகாட்டல் என்று பல வகைகளில் உதவி பெறுவர். 

மேலும் செய்திகள் கட்டுரைகள்