Skip to main content
"சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டு... 2024..."
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டு... 2024..."

வாசிப்புநேரம் -
"சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டு... 2024..."

(படம்: CNA/Syamil Sapari)

சென்ற ஆண்டு (2024), சிங்கப்பூரின் ஆக வெப்பமான வருடமாகப் பதிவானது.

சிங்கப்பூரின் வானிலை ஆய்வகம் அதனைத் தெரிவித்தது.

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டும் 2016ஆம் ஆண்டும் காணப்பட்டதைப் போன்ற ஆக அதிக வெப்பநிலை கடந்த ஆண்டும் பதிவானது.

El Nino பருவநிலை மாற்றத்தால் சென்ற ஆண்டு சிங்கப்பூரில் அதிக வெப்பம் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆண்டின் முற்பாதியில் பெய்த மழைக்கும் அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதம் மிகவும் சூடாக இருந்தது. அதுவே ஆக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது.

ஏப்ரலில் சராசரி வெப்பநிலை 29.4 டிகிரி செல்ஸியஸாகப் பதிவானது.

இரண்டாவது ஆக வெப்பமான மாதமாக வந்தது ஜூலை. இதுவரை பதிவான ஆகச் சூடான ஜூலை மாதமும் அதுதான்.
சராசரி வெப்பநிலை 29.3 டிகிரி செல்சியஸ்.

சென்ற மாதம் (டிசம்பர் 2024) ஆகச் சூடான டிசம்பர் மாதமாகப் பதிவானது. சராசரி வெப்பநிலை 27.7 டிகிரி செல்சியஸ்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்