"புகைமூட்டத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை"
வாசிப்புநேரம் -
CNA/Raydza Rahman
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் மற்ற ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து எல்லை கடந்த புகைமூட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முனையும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்கிறது.
வட்டாரச் சந்திப்புகளின்போது எல்லை கடந்த புகைமூட்டம் குறித்துப் பேசப்படும் என்று மற்ற ஆசியான் நாடுகள் கூறியதாகத் திருவாட்டி ஃபூ சொன்னார்.
சிங்கப்பூர் அந்தக் கலந்துரையாடல்களை ஆதரிக்கும்.
புகைமூட்டத்திற்கு காரணமான நிறுவனங்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சிங்கப்பூர் பகிரும்.
காட்டுத் தீயையும் எல்லை கடந்த புகைமூட்டத்தையும் இணைந்து கையாள இந்தோனேசியாவில் நிலையம் ஒன்றைச் சிங்கப்பூர் அமைக்கவுள்ளதாகத் திருவாட்டி ஃபூ கூறினார்.
நிலையத்தை அமைக்க 6 உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஆசியான் எல்லை கடந்த புகைமூட்ட ஒப்பந்தம் 2002ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.
புகைமூட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஃபூ பதிலளித்தார்.

ஆதாரம் : CNA