Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒரு மாதச் சோதனை....சட்டவிரோதக் கும்பல்களைச் சேர்ந்த 21 சந்தேக நபர்கள் பிடிபட்டனர்

வாசிப்புநேரம் -
ஒரு மாதச் சோதனை....சட்டவிரோதக் கும்பல்களைச் சேர்ந்த 21 சந்தேக நபர்கள் பிடிபட்டனர்

(படங்கள்: சிங்கப்பூர்க் காவல்துறை)

சிங்கப்பூர்க் காவல்துறை நடத்திய ஒரு மாத அதிரடிச் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதக் கும்பல்களைச் சேர்ந்த 21 சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

அவர்கள் 17 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சுமார் 60 பொதுக் கேளிக்கை இடங்கள், இரவு நேர விடுதிகள், உணவு பானக் கடைகள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட திடீர்ச் சோதனைகளின்போது அவர்கள் பிடிபட்டதாய்க் கூறப்பட்டது.

சட்டவிரோதக் கும்பல்களின் உறுப்பினர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் மூவர் மின் சிகரெட் கருவிகள் வைத்திருந்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

24 பேர் மீதும் விசாரணை நடைபெறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்