புலாவ் புக்கோமில் தீ - ஆபத்தான நிலையில் மூவர்
Shell-லின் புலாவ் புக்கோம் (Pulau Bukom) உற்பத்தித் தளத்தில் நேற்று மூண்ட தீயில் காயம்பட்ட 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம் (படம்: Shell இணையப்பக்கம்)
சிங்கப்பூர்: Shell-லின் புலாவ் புக்கோம் (Pulau Bukom) உற்பத்தித் தளத்தில் நேற்று மூண்ட தீயில் காயம்பட்ட 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பற்றிய தகவல், தனக்கு, நேற்று மாலை ஆறே கால் மணிக்குத் தெரிய வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் நிறுவனத்தின் அவசரச்சேவைப் பிரிவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
6 ஊழியர்களுக்குத் தீக் காயங்கள் ஏற்படவே, அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர், அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மற்ற 3 பேரில் ஒருவர் சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். மற்ற இருவரும் வெளிநோயாளி சிகிச்சைப் பெற்ற பிறகு, வீட்டுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.