அழகுசாதனப் பொருள் பெட்டிகளில் மின்-சிகரெட் கடத்தல் - மலேசியர்கள் கைது
வாசிப்புநேரம் -
துவாஸ் சோதனைச் சாவடியில் 22,000க்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவை அழகுசாதனப் பொருள்கள் இருப்பதாகக் கூறப்பட்ட பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இரு மலேசியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் வாகன ஓட்டுநர்; மற்றவர் அவரின் உதவியாளர்.
இம்மாதத் தொடக்கத்தில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரியைச் சோதித்தனர்.
அப்போது அந்த மின்-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
14,000 புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அச்சம்பவம் விசாரணைக்காகச் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi