சிங்கப்பூரில் குறைவான மழை
ஜனவரி நடுப்பகுதியிலிருந்து குறைவான நாட்களே மழை பெய்துள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது
சிங்கப்பூர்: வட கிழக்குப் பருவக் காற்றின் வறட்சியான கட்டம், இவ்வாண்டில் சற்று முன்னதாகவே- வந்துள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்திருக்கிறது. இம்மாதத்தில் மொத்த மழையின் அளவு, சராசரியை- விடக் கணிசமாகக் குறைவாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி நடுப்பகுதியிலிருந்து குறைவான நாட்களே மழை பெய்துள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. எஞ்சிய நாட்களில், பொதுவாக வறட்சியான, காற்றோட்டச் சூழலைப் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம். சில நாட்களில், குறிப்பிட்ட இடங்களில் குறுகிய நேரத்துக்கு மழை பெய்யலாம். பிப்ரவரி மாதத்திலும் சராசரிக்குக் குறைவான மழையே எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம், ஆண்டின் ஆக வறட்சியான மாதங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் கடந்தாண்டின் நீண்ட வறட்சிக்- காலத்தில்- இருந்த அளவுக்கு, மோசமான சூழ்நிலை இருக்காது என்று கூறப்பட்டது.