Colour Run: முதல் நாளன்று 9,000 பங்கேற்பாளர்கள்
Color Run நிகழ்ச்சியின் முதல் நாளன்று சுமார் 9 ஆயிரம் பேர் அதில் கலந்துக்கொண்டனர். சிங்கப்பூரில் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி, 2 தினங்களுக்கு நடைபெறும்.
கோப்புப் படம் (படம்: The Color Run's Twitter பக்கம்)
சிங்கப்பூர்: Color Run நிகழ்ச்சி நேற்று மீண்டும் திரும்பியது. முதல் நாளன்று சுமார் 9 ஆயிரம் பேர் அதில் கலந்துக்கொண்டனர். சிங்கப்பூரில் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி, 2 தினங்களுக்கு நடைபெறும்.
உலகளவில், 50க்கும் அதிகமான நாடுகளில் இந்த Color Run நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இம்முறை, சிங்கப்பூரில் நடக்கும் ஓட்டத்தில் பங்கேற்க, 16 ஆயிரம் பேர் பதிவுசெய்துள்ளனர்.
நிகழ்ச்சி பாதுகாப்பானது என்று உள்ளூர் அதிகாரிகள் உறுதிபடுத்தி அனுமதி பெற்றனர்.
கடந்த ஜூன் மாதம் தைவான் நீர் விளையாட்டுக் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, Color Run நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெறாது என்ற சந்தேகங்கள் எழுந்தன. தைவான் வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிலர் மாண்டனர்.