Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பேரங்காடிகளில் விற்கப்படும் ஆரோக்கிய உணவுப் பொருட்களுக்குக் கூடுதல் விலைக் கழிவு (வீடியோ)

பேரங்காடிகளில் விற்கப்படும் ஆரோக்கிய உணவுப் பொருட்களுக்குக் கூடுதல் விலைக் கழிவு வழங்கப்படவிருக்கிறது.உணவங்காடிகளில், ஆரோக்கியமான சமையல் எண்ணெயின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: பேரங்காடிகளில் விற்கப்படும் ஆரோக்கிய உணவுப் பொருட்களுக்குக் கூடுதல் விலைக் கழிவு வழங்கப்படவிருக்கிறது.உணவங்காடிகளில், ஆரோக்கியமான சமையல் எண்ணெயின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரர்களை ஆரோக்கிய உணவைத் தெரிவு செய்ய ஊக்குவிக்கும் புதிய முயற்சிகள் இவை. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் Foodfare உணவங்காடிகளிலும், காப்பிக் கடைகளிலும் இனிமேல் ஆரோக்கியமான சமையல் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும்.

Related article image

ஆரோக்கிய உணவை ஊக்குவிக்கும் வகையில், காங்கிரசின் FairPrice பேரங்காடிகளில் ஆரோக்கியமான சமையல் எண்ணெய் வகைகளுக்கு 15 விழுக்காடு வரையிலான கழிவு வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதிவரை அந்தச் சலுகை நீடிக்கும்.மேலும் தீட்டப்படாத முழு தானிய அரிசி வகைக்கும், இன்றிலிருந்து இரண்டரை மாதங்களுக்கு 5 விழுக்காட்டுக் கழிவு கிடைக்கும்.

Related article image

அத்துடன், FairPrice பேரங்காடிகளிலும் Foodfare உணவங்காடிகளிலும், சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆரோக்கியத் தூதர்கள் நிறுத்தப்படுவர்.
எந்தெந்த உணவுப் பொருளைத் தெரிவு செய்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விளக்கமளிப்பர். தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் வர்த்தக நிறுவனங்கள் இதுவரை, வாழ்க்கைச் செலவினத்துக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வந்தன.இனிமேல் அவை, மூப்படைதல், ஆரோக்கியம், சமூக முன்னேற்றம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் தனது சேவையை விரிவுபடுத்தவிருக்கின்றன.

மேலும் செய்திகள் கட்டுரைகள்