மோசடிச் சந்தேகத்தில் 83 பெண்கள் உட்பட 232 பேரிடம் விசாரணை
வாசிப்புநேரம் -
(படம்: envato.com)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களின் தொடர்பில் 232 பேர் பிடிபட்டுள்ளனர்.
தீவு முழுவதும் நடத்தப்பட்ட 2 வாரத் திடீர்ச்சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
அவர்களில் 149 பேர் ஆண்கள்,
83 பேர் பெண்கள்
அவர்கள் 16 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
650க்கும் அதிகமான மோசடிகளில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நண்பரைப் போல் நடிப்பது, பொய்யான முதலீடுகளைப் பரப்புவது, வேலை மோசடிகள், மின்-வணிக மோசடி ஆகியவை அவற்றுள் சில.
மோசடிகளில் மக்கள் இழந்த தொகை சுமார் 6.15 மில்லியன் வெள்ளி.
பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
எப்படிப்பட்ட மோசடி என்பதைப் பொறுத்து தண்டனை வேறுபடும்.
மூவாண்டுகளுக்கும் பத்தாண்டுகளுக்கும் இடைப்பட்ட சிறைத்தண்டனை, 500,000 வெள்ளி வரை அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.
மோசடிகளிலிருந்து தப்பிக்க மக்களின் விழிப்புணர்வு அவசியம் என்றது சிங்கப்பூர்க் காவல்துறை.

ஆதாரம் : Others