Skip to main content
24 மணி நேரம் விடாத மழை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

24 மணி நேரம் விடாத மழை - சில பகுதிகளில் தட்பநிலை 22 டிகிரி செல்சியஸுக்கும் குறைவு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 24 மணி நேரம் விடாமல் மழை பெய்துகொண்டிருப்பதால் இன்று காலை சில வட்டாரங்களில் தட்பநிலை 22 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகப் பதிவானது.

நியூட்டனில் காலை 8.50 மணியளவில் தட்பநிலை 21.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது என்று வானிலை ஆய்வகத்தின் இணையத்தளம் காட்டுகிறது. தீவில் இன்று பதிவான ஆகக் குறைவான தட்பநிலை அது.

பாசிர் ரிஸ் செண்ட்ரலில் (Pasir Ris Central) ஆக அதிகமான அளவில் மழைப்பொழிவு 86.8 மில்லிமீட்டராகப் பதிவானது.

வானிலை ஆய்வு நிலையத்தின் 24 மணி நேர வானிலை முன்னுரைப்பு, நாட்டில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று காட்டுகிறது.

தட்பநிலை 22 முதல் 26 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டது. மழை திங்கள்கிழமை (13 ஜனவரி) வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்