Skip to main content
சிங்கப்பூரில் 24 கிலோமீட்டர் ரயில் பசுமைப் பாதை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 24 கிலோமீட்டர் ரயில் பசுமைப் பாதை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் மத்திய பகுதியில் உள்ள குடியிருப்புப் பேட்டைகளை இணைக்க 24 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பசுமைப் பாதை அமைக்கப்படவிருக்கிறது.

அங்கு மொத்தம் 10 வசதிகள் அமைக்கப்படும்.

மக்கள் அங்கு ஓய்வெடுக்கலாம்; கலை அல்லது மரபுடைமை நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

உதாரணத்திற்கு, குவீன்ஸ்வே மேம்பாலச் சாலைக்குக் கீழ் பெரிய கூரையுள்ள இடமுள்ளது.

2027ஆம் ஆண்டுக்குள் அந்த இடம் பசுமை நிறைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த இடமாக உருமாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோக, ஸ்தேக்மொந்த் ரிங்கில் (Stagmont Ring) மற்றோர் இடம் அமைக்கப்படும்.

அது 2035ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.

பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில், பசுமை நிறைந்த வசதிகள் செய்துத்தரப்படும்.

அங்கு ஒரு சமூகத் தோட்டமும் அமைக்கப்படலாம்.

ஒவ்வோர் இடத்திலும் தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் சேர்க்கப்படும்.

கிராஞ்சியில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான திடல்,
தீவு-விரைவுச்சாலையின் பாலத்தின்கீழ், பூ, விலங்குகள் ஆகியவற்றைச் சித்திரிக்கும் சுவரோவியங்கள் ஆகியவை அதில் அடங்கும்.

முந்திய புக்கிட் தீமா ரயில்வே நிலையம் உட்பட பல இடங்களைச் சமூக ஊடகத்தில் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவேற்றம் செய்வதற்கான வாய்ப்புகளையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்