"அடுத்த 50 ஆண்டுக்கு அமைதி நீடிக்குமா என்பது உறுதியல்ல"
சிங்கப்பூர் 50 ஆண்டு கால அமைதியைக் கொண்டாடினாலும் அது அடுத்த 50 ஆண்டுக்கு நீடிக்குமா என்பது உறுதியல்ல. ஆகையால், சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு அண்மை தொழில்நுட்பத்துடன் படையினர் மற்றும் அனைத்து சிங்கப்பூரர்களின் தொடர் ஆதரவும் தேவை என்று பிரதமர் திரு லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

கோப்புப் படம். பிரதமர் திரு லீ சியென் லூங். (படம்: PMO)
சிங்கப்பூர்: சிங்கப்பூர் 50 ஆண்டு கால அமைதியைக் கொண்டாடினாலும் அது அடுத்த 50 ஆண்டுக்கு நீடிக்குமா என்பது உறுதியல்ல. ஆகையால், சிங்கப்பூர் ஆயுதப் படைக்கு அண்மை தொழில்நுட்பத்துடன் படையினர் மற்றும் அனைத்து சிங்கப்பூரர்களின் தொடர் ஆதரவும் தேவை என்று பிரதமர் திரு லீ சியென் லூங் கூறியிருக்கிறார். சிங்கப்பூர் ஆயுதப் படை, தற்காப்பு அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் திரு லீ நேற்று உரையாற்றினார். சிங்கப்பூர் ஆயுதப் படையின் பொன்விழாக் கொண்டாட்டங்களின்போது அவரின் உரை இடம்பெற்றது.
ராணுவ வீரர்களிடையில் உள்ள முன்னோடித் தலைமுறையினருக்குத் திரு லீ நன்றி தெரிவித்துக்கொண்டார். அவர்களிடையே நிலவிய உணர்வுகள், துணிச்சல், தன்னலமற்ற சிந்தனை போன்ற அம்சங்கள் எதிர்காலத் தலைமுறையினரிடையிலும் காணப்பட வேண்டும் என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.