Skip to main content
துவாஸில் 29 வயது ஆடவர் கொலை; 25 வயது ஆடவர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

துவாஸில் 29 வயது ஆடவர் கொலை; 25 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
துவாஸில் 29 வயது ஆடவர் கொலை; 25 வயது ஆடவர் கைது
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 30 Aug 2026 04:20PM புதுப்பிப்பு : 30 Aug 2026 04:36PM

துவாஸில் 29 வயது ஆடவரைக் கொலை செய்த சந்தேகத்தில் 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நேற்றிரவு (29 ஆகஸ்ட்) துவாஸ் சௌத் ஸ்ட்ரீட் 15இல் துவாஸ் சௌத் அவென்யூ 14ஐ நோக்கிச் செல்லும் பகுதியில் நடந்தது.

காவல்துறைக்கு அதையொட்டி இரவு 10.10 மணியளவில் தகவல் கிடைத்தது.

29 வயது ஆடவர் சாலையில் அசைவின்றிக் காணப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

அவர் மாண்டதைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் உறுதிசெய்தார்.

சந்தேக நபர் 4 மணி நேரத்தில் பிடிபட்டார்.

மாண்டவரும் சந்தேக நபரும் ஏற்கனவே தொடர்பில் இருந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மீது நாளை (31 ஆகஸ்ட்) குற்றஞ்சாட்டப்படும்.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்