Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் - மனநிறைவு நிலை 5 ஆண்டு உச்சம்

சிங்கப்பூரில், பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் குறித்த மக்களின் மனநிறைவு நிலை, கடந்த 5 ஆண்டில் உச்சத்தைத் தொட்டிருப்பதாகச், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளிகளின் மனநிறைவு நிலை குறித்து அமைச்சு கடந்த ஆண்டு மேற்கொண்ட கருத்தாய்வின் முடிவுகள் அதனைப் புலப்படுத்தின. 

வாசிப்புநேரம் -
பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் - மனநிறைவு நிலை 5 ஆண்டு உச்சம்

கோப்புப் படம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் குறித்த மக்களின் மனநிறைவு நிலை, கடந்த 5 ஆண்டில் உச்சத்தைத் தொட்டிருப்பதாகச், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளிகளின் மனநிறைவு நிலை குறித்து அமைச்சு கடந்த ஆண்டு மேற்கொண்ட கருத்தாய்வின் முடிவுகள் அதனைப் புலப்படுத்தின. கருத்தாய்வில் பங்கேற்ற 79 விழுக்காட்டினர், ஒட்டுமொத்த மனநிறைவு நிலை, சிறப்பாக இருந்தது அல்லது நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். 

2013-ம் ஆண்டு 77 விழுக்காட்டினர் அவ்வாறு கூறியிருந்தனர். கருத்தாய்வில் பங்கேற்றவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதில், அனைத்து சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் முன்னேற்றம் காட்டியிருப்பதாக, அமைச்சு தெரிவித்தது. மொத்தம் 11,371 நோயாளிகளும், பராமரிப்பாளர்களும் கருத்தாய்வில் கலந்துகொண்டனர். சென்ற செப்டெம்பர் மாதத்துக்கும், இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கருத்தாய்வு நடத்தப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்