பாலர்பள்ளியில் 26 பேருக்கு வயிற்றுக்கோளாறு
TODAY/Ili Nadhirah Mansor
This audio is generated by an AI tool.
மவுண்ட்பேட்டன் (Mountbatten) வட்டாரத்தில் உள்ள PCF Sparkletots பாலர்பள்ளி ஒன்றில் 26 பேர் வயிற்றுக் கோளாற்றால் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
புளோக் 92இல் உள்ள PCF Sparkletots பாலர்பள்ளியில் மாணவர்கள் 24 பேரும் ஊழியர்கள் இருவரும் பாதிக்கப்பட்டனர்.
குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு, தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியன சம்பவம் குறித்துக் கூட்டறிக்கை வெளியிட்டன.
சம்பவம் கடந்த திங்கட்கிழமை (25 ஆகஸ்ட்) நடந்ததாய் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
அனைவரும் மறுநாள் பள்ளிக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
நிலைமையை அணுக்கமாய்க் கண்காணிப்பதாய்க் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது.