Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நொறுக்குத்தீனி போல் மறைத்து வைக்கப்பட்ட தீர்வை செலுத்தாத சிகரெட் - 8 பேர் கைது

வாசிப்புநேரம் -
நொறுக்குத்தீனி போல் மறைத்து வைக்கப்பட்ட தீர்வை செலுத்தாத சிகரெட் - 8 பேர் கைது

(படம்: Singapore Customs)

சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய இரு சோதனைகளில் தீர்வை செலுத்தப்படாத 26,000க்கும் அதிகமான சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றுக்கு சுமார் 485,000 வெள்ளி தீர்வை செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

8 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 33 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சென்ற மாதம் (மே) 14ஆம் தேதி சுவா சூ காங் ஸ்ட்ரீட் 52, தெம்பனிஸ் அவென்யூ 9 ஆகிய இடங்களில் திடீர்ச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுவா சூ காங்கில் ஒரு வீட்டில் தீர்வை செலுத்தப்படாத கிட்டத்தட்ட 22,000 சிகரெட் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவை நொறுக்குத் தீனி போன்று பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சிங்கப்பூரர்கள் மூவரும் இந்தோனேசியர்கள் நால்வரும் பிடிபட்டனர்.

அதே நாளன்று தென்பனிஸில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ஒரு சிங்கப்பூரர் கைதானார்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு காரையும் சுமார் 38,000 வெள்ளி பணத்தையும் சுங்கத்துறை பறிமுதல் செய்தது.

அந்தப் பணம் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்களின் விற்பனையில் கிடைத்தது என்று சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்