Skip to main content
தைவான் வெடிப்புச் சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தைவான் வெடிப்புச் சம்பவம் - சிங்கப்பூரர் காயம்

தைவானில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், சிங்கப்பூரர் ஒருவர் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தைபேயில் இருக்கும் சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அந்தத் தகவலை வெளியிட்டது.பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும் அது தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
தைவான் வெடிப்புச் சம்பவம் - சிங்கப்பூரர் காயம்

தைப்பெயில் உள்ள ஃபொர்மோஸா ஃபன் கோஸ்ட் (Formosa Fun Coast) நீர்ப்பூங்கா.

வெளியீடு : 28 Jun 2015 05:57PM புதுப்பிப்பு : 28 Jun 2015 10:36PM

தைப்பெய், தைவான்: தைவானின் கேளிக்கைப் பூங்கா ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், சிங்கப்பூர் பெண் ஒருவர் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைப்பெயில் இருக்கும் சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அந்தத் தகவலை வெளியிட்டது. காயமுற்ற Megan Loy-வின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும் அது தெரிவித்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் அளிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை ஐந்நூறுக்கும் மேல் அதிகரித்துள்ளது. அவர்களில் 180-க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்