Skip to main content
"இந்த மண்ணுக்கே உரிய தோட்டம் இது !"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"இந்த மண்ணுக்கே உரிய தோட்டம் இது !"

சிங்கப்பூர்த் தோட்ட விழாவில், உள்ளூருக்கே உரித்தான, இந்த மண்ணில் வளரும் செடி, கொடி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இடம் இது. நம்முடைய இளமைக் காலத்தை நினைவுபடுத்தும் அம்சங்களும் இதனோடு இணைக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
"இந்த மண்ணுக்கே உரிய தோட்டம் இது !"

சுற்றுச்சூழல் ஆர்வலர் திருமதி லலிதா. (படம்: பொன். மகாலிங்கம்)

சிங்கப்பூர்த் தோட்ட விழாவில் உள்ளூருக்கே உரித்தான இந்த மண்ணில் வளரும் செடி, கொடி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இடம் இது.

நம்முடைய இளமைக் காலத்தை நினைவுபடுத்தும் அம்சங்களும் இதனோடு இணைக்கப்பட்டுள்ளன. பெரிய தலையணை போல் இருப்பது  சொட்டாங்கல் விளையாட்டை நினைவுபடுத்தும்.மிகப் பெரிய கதவு, ஆங்கில எழுத்துகளைக் கொண்ட தரை விளையாட்டு அட்டைகள் போன்றவை, பலருக்கும் பாலர் பள்ளிகளை நினைவூட்டும்.


Related article image
Related article image

பெரிய செம்பருத்தி, பர்மா செவ்வந்தி, ஆர்க்கிட், மல்லிகை, அரளி என விதவிதமான மலர்களும் இங்குண்டு. எல்லாம் திருமதி லலிதா நாயர் குழுவினரின் கைவண்ணம்.

செம்பவாங், உட்லண்ட்ஸ் வட்டாரங்களில் சமூகத் தோட்டங்களை உருவாக்குவதில் இவரது பங்கு அதிகம்.

Related article image

தோட்டப் பணிகள் செய்வதால் நமக்குக் கிடைக்கும் மனநிறைவை வார்த்தைகளில் வருணிக்க முடியாதது என்றார் திருமதி லலிதா.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..

செடிகொடிகள், பூச்சிகள், பறவைகள் அனைத்துக்கும்  உரியது பூமி என்பதைப் பிள்ளைகளின் மனத்தில் பதிய வைக்க, தோட்டக் கலை பெரிதும் உதவுவதாகச் சொன்னார் திருமதி லலிதா.

மேலும் செய்திகள் கட்டுரைகள்